இந்தியாவின் 5 மர்மமான இடங்கள்
இந்தியாவின் மிகவும் திகில் இடங்களில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பங்கார் கோட்டை. ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு) மையம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கோட்டையின் இடிபாடுகளுக்குள் செல்ல கூடாது என்று பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது. ராஜஸ்தான் அம்பர் பகுதியில் ஆண்ட ராஜபுத்திரர்கள் கட்டிய இந்த அக்கோட்டை ஒரு சூனியம் செய்யும் தாந்த்ரீகர் சாபத்தால் இப்படி மாறியதாக கூறப்படுகிறது. மாலையில் கோட்டைக்குள் சென்ற யாரும் உயிரோடு திரும்பி வந்ததாக தெரியவில்லை.
சிம்லாவில் உள்ள சுரங்கப்பாதை 33 கர்னல் பரோக் பெயரிடப்பட்டது, இந்த முழுமையடையாத சுரங்கப்பாதைக்குள் கர்னல் ஒருவர் புதைக்கப்பட்டதாகவும், அவர் அந்த சுரங்கப்பாதையில் பேயாக இருந்து உயிர்களை வேட்டையாடுவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்தியாவில் பேய்கள் அதிகம் உள்ள இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கல்கா-சிம்லா பாதையில் உள்ள இந்த சுரங்கப்பாதையைக் கடக்க 2 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. சுரங்கப்பாதைக்கு வெளியே பரோக் ரயில் நிலையம் உள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய திரைப்பட நகரங்களில் ராமோஜி ஃபிலிம் சிட்டி ஒன்றாகும். பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் இந்த இடம் பல கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு லைட்மேன்கள், தொழிலாளர்கள், நடிகர்கள் பலர் வினோத உணர்வுகளை பெற்றதாக தெரிவித்துள்ளனர். காயங்களுக்கு ஆளாவது, பெண்கள் மர்மமான முறையில் அறைகளில் அடைக்கப்படுவது, அவர்களின் ஆடைகளை ஒரு மாய சக்தியால் கிழிப்பதை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பல கதைகள் சொல்லப்பட்டாலும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
குஜராத் சூரத் பகுதியில் அமைந்துள்ள டுமாஸ் கடற்கரை முன்பு ஒரு கல்லறை இடமாக பயன்படுத்தப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த இடம் பேய் நடமாட்டம் உள்ளதாக பலர் கூறுகின்றனர். அதோடு, இந்த கடற்கரையில் மாலை நேரங்களில் தனியாக நடைபயணம் மேற்கொண்ட பலர் காணாமல் போன நிகழ்வுகள் அதிகம் பதிவாகியுள்ளன. அவர்களில் யாரும் திரும்பி வரவில்லைஎனவும் கூறப்படுகிறது. அவர்கள் எங்கு போனார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. அதனால் இது அமானுஷ்யம் நிறைந்ததாகவே கருதப்படுகிறது.
விலாயத் மஹால் என்றும் அழைக்கப்படும், மல்சா மஹால், துக்ளக் காலத்தைச் சேர்ந்த ஒரு வேட்டையாடும் விடுதியாகும். இது டெல்லியில் உள்ள சாணக்யபுரியில் அமைந்துள்ளது. செப்டம்பர் 10, 1993 அன்று, பேகம் விலாயத் மஹால் தனது 62 வயதில் வைரத்தை சாப்பிட்டு இங்கு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கதை உள்ளது. அன்றிலிருந்து இங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.