5 வயதுக் குழந்தைக்கு எமனாக வந்த கேக்!
கேக் உட்கொண்ட 5 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் பெங்களூர் நகரில் இடம்பெற்றுள்ளது.
உணவு விநியோக ஊழியராகப் பணிபுரியும் பாலராஜ் என்பவர் வாடிக்கையாளர் ஒருவர் ஓடர் செய்து வேண்டாம் என நிராகரித்த கேக்கை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
அந்த கேக்கை உட்கொண்ட பாலராஜின் 5 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் அந்த கேக்கை உட்கொண்ட பாலராஜ் மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோர் வைத்தியசாலையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.