5 பெண்கள் குளவிகொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்

நுவரெலியாவில் இன்று திங்கட்கிழமை 5 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் காலை 10.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில்hன மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.