5 நாட்களுக்கு நாய்களின் உணவை சாப்பிடும்  நபருக்கு 23 இலட்சம்

நாய்களுக்கான உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமொன்று தாம் தயாரிக்கும் உணவினை  5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

லண்டனின் செயற்பட்டு வரும் ஆம்னி என்ற  தாவரங்களைப் பயன்படுத்தி  நாய்களுக்காக உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்” நாம் தயாரிக்கும்  உணவுப் பொருட்களில் இனிப்பு உருளை கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்திருக்கும்.இவ் வேலைக்குத் தெரிவு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை.

எனினும், இவ் உணவை உட்கொண்டால்  ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். மேலும் பிரித்தானியராகவும்  18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.