4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் : இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்!

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்றுள்ளனர்.

முப்பாய்ச்சல் (Triple Jump): பசிந்து மல்ஷான் (Pasindu Malshan) 16.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இது இலங்கையின் முதல் தங்கப் பதக்கமாகும்.

ஆண்கள் 100 மீ ஓட்டம்: சமோத் யோதசிங்க (Chamod Yodasinghe) 10.30 வினாடிகளில் ஓடி, தங்கப் பதக்கம் வென்றதுடன், “வேகமான மனிதன்” (Fastest Man) என்ற பட்டத்தையும் பெற்றார். இவரது இந்தச் சாதனை சாம்பியன்ஷிப் போட்டி சாதனையை முறியடித்துள்ளது.

பெண்கள் 100 மீ ஓட்டம்: சஃபியா யாமிக் (Safiya Yamic) 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய போட்டி சாதனையையும் நிலைநாட்டினார்.