அக்கரைப்பற்றில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 46 வயது நபர் கைது
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில், யுவதி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதிக்கு, திருமணம் முடிக்காத 46 வயதுடைய ஆண் ஒருவர், தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து, சந்தேகநபரை சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அந்த பகுதியில் நீண்ட காலமாக இவ்வாறு பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக, பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
