45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில், 45.8 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன், இன்று புதன்கிழமை மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூன்று பேரும், 15 பொதிகளில் வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து கொண்டு வந்த போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘கிரீன் சேனல்’ எனப்படும் பயணச்சீட்டு மூலம், சந்தேக நபர்கள் பயணிகளை அழைத்து வர முயற்சித்த வேளை, அவர்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
24, 28 மற்றும் 30 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள், டுபாயில் சிகரெட்டுகளை வாங்கி டோஹா வழியாக இலங்கைக்கு கொண்டு வர முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.