45 சிறார்களுக்கு மந்தபோசணை

பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 45 சிறார்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அந்த சிறுவர்களுக்கு குறைந்தது ஒரு வருடத்திற்காவது தொடர்ச்சியாக சத்துணவு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பலன் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமது அதிகார வரம்பில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைந்து வருவதாகவும்இ 2014 ஆம் ஆண்டில் 14.5 வீதமாக இருந்த பிறப்புவீதம் தற்போது 9 வீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்