45 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கடற்படையினரால் மீட்பு

மன்னாரில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் – நெடுகுடா கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் குழுவொன்றே இந்த போதைப் பொருளைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட இந்த போதைப்பொருட்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருள், கடற்படையின் நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம், என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.