செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம்
மனித புதைகுழி சர்வதேச ரீதியாக கரிசனையை ஏற்படுத்தியுள்ள செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில் நேற்று வெள்ளிக்கிழமையும் கடந்த வியாழக்கிழமையும் நான்கு சிறார்களின் மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
அத்துடன் நேற்று சிறுமி ஒருவரின் ஆடையும் அடையாளம் காணப்பட்டது.
இதுவரையான அகழ்வு பணிகளில் மொத்தமாக 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 37 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.