401ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயம் 401ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் இலங்கையின் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜுலியன் பிரான்சிஸின் தலைமையில் விசேட ஜெபமாலை வழிபாடு நடைபெற்றதுடன் திருவுருவம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்ற இடத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்