அதிக விலைக்கு முட்டை விற்பனை : 4 மில்லியனுக்கு மேல் அபராதம்

முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்த 29 வர்த்தக நிலையங்களுக்கு 4.1 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வத்தளை, அத்தனகல்ல, நீர்கொழும்பு, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா ஆகிய நீதிமன்றங்களே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளன.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் வெளியிட்டது.

ஒரு வெள்ளை நிற முட்டை ரூ. 44 மற்றும் ஒரு பழுப்பு நிற முட்டையின் ரூ. 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

வர்த்தமானி அறிவித்தலை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.