
4 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்திலேயே பாலியல் துஷ்பிரயோகம்
இந்தியாவில், டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய பியோன் கைது.
சுல்தான்பூரி பகுதியை சேர்ந்த (வயது – 43) சுனில் குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோஹினி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள பாடசாலையில் சேர்த்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 9ஆம் தேதி அன்று சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ப்யூனாக வேலை பார்க்கும் சுனில் குமார் சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார்.
பின்னர், சிறுமியை பாலியல் ரீதியாக தீண்டி தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போய் சிறுமி அழத் தொடங்கிய நிலையில், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். மாலை வீடு திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.
மேலும் தனக்கு தொல்லை கொடுத்த நபருக்கு பெரிய மீசை இருந்தது என அடையாளம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
சுனில் குமாரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர் இதற்கு முன்னர் வேறு சிறுமிகளுக்கு இதுபோல தொல்லை கொடுத்தாரா என்று விசாரணை நடைபெறுகிறது.
மேலும்இ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
