4-வது மாடியில் பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது தவறி விழுந்த சிறுவன் பலி
இந்தியாவில் சென்னை வடபழனியில், சிறுவன் ஒருவர் நான்காவது மாடியில் இருந்த வாட்டர் டேங்க் மீது நின்றபடி பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
வடபழனியைச் சேர்ந்த பிரஜன் ( வயது 13 ) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் படிக்கப்போவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு நண்பரின் அபார்ட்மெண்ட் வீட்டிற்கு சென்றுள்ளார். நான்காவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி, தனது பெண் தோழிக்கு வீடியோ கால் செய்து, “நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார்” என காட்டிக்கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
