
4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
புத்தளம் மாவட்டம் மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நான்கு மாணவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
