4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின் FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறியுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
ரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
