
4 நவீன பேருந்துகளுக்கு தீ வைப்பு
வென்னப்புவ பகுதியில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 4 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது
வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே எரிக்கப்பட்டுள்ளன.
அருகில் இருந்த சிசிடிவி கெமராவை சோதனையிட்ட போது, சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதுடன் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
