
4 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மாதகல் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட 4 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவும், இரு சந்தேக நபர்களும், யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
