4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

அநுராதபுரத்தில் ருவன்வெலிசாய பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 இலட்சம் பெறுமதியான 4 கிலோ 250 கிராம் கஞ்சாவே இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் அநுராதப்புரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்