4 கிலோவிற்கும் மேற்பட்ட கஞ்சா மீட்பு : ஒருவர் கைது

 

-யாழ் நிருபர்-

 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை  4 கிலோ 470 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் பாரப்படுத்தப்படவுள்ளார். அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் , என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.