4 இலட்சம் பெறுமதியான வாழைகள் யானை தாக்கி நாசம்

 

முல்லைத்தீவு மாவட்ட உடையார்கட்டு கமநல சேவை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தொட்டியடி மேற்கு பகுதியில் நேற்று புதன்கிழமை வாழை தோட்டத்திற்குள் புகுந்த 04 யானைகள் பயன் தரக்கூடிய கப்பல் வாழை மரங்களை நாசம் செய்துள்ளது.

இரவு 07 மணியளவில் தோட்த்துக்குள் புகுந்த 04 யானைகள் அதிகாலை 2.00மணி வரை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது எனவும், அரை ஏக்கர் வாழை திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட 480 ரூபா பெறுமதி மிக்க வாழைகுட்டிகள், அதில் 225 வாழைகளை பயன் பெறும் நேரத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 04 இலட்சம் ரூபாய் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், போன வருடமும் இதே போன்ற அழிவை சந்தித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள யானை வேலி ஒன்றை அமைத்து தருமாறும் அவர்கள் கேட்டுள்ளார்.