4ஆம் திகதி முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. அதன்படி, கடந்த மாத திருத்தத்தை போன்றே எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,186 ரூபாவாகவும் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 598 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.