38 மனைவிகளுடன் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில்: 199 பேர் வாழும் அதிசய குடும்பம்

இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் சியோனா சானா எனபவர் 38 பெண்களை மணந்து 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் என மொத்தம் 199 பேருடன் வாழ்ந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட 4 மாடி கட்டிடத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தனது 76 வயதில் சியோனா சானா உயிரிழந்தார். எனினும் அதன் பின்பும், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

சியோனா சானா தன்னுடைய 17 வயதில் முதல் மனைவியை மணந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரே ஆண்டில் 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு மனைவிக்கும் தனி படுக்கை அறை மற்றும் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், எல்லா நேரங்களிலும் 7 அல்லது 8 மனைவிகளை பக்கத்தில் வைத்திருப்பதை சியோனா சானா விரும்புவார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், ஒரு பெரிய டைனிங் ஹாலில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் எனவும் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

38 மனைவிகளுடன் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்

38 மனைவிகளுடன் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்

38 மனைவிகளுடன் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்