375 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 1,190 தொடர் சோதனைகளைச் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அண்மைய சோதனையின்போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த சுமார் 375 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்புத் தரத்தைப் பேணுவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் சுமார் 1,800 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தரமற்ற உணவுகள் அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்படும் இடங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாடுகளை சுகாதார அமைச்சின் 1926 என்ற துரித இலக்கத்திற்கு அல்லது அந்தந்தப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.