37ஆவது பொலிஸ் மாஅதிபரை தெரிவு செய்ய அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது .
நாட்டின் 37ஆவது பொலிஸ் மாஅதிபரைத் தெரிவு செய்ய அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது .
அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு பாராளுமன்ற வளாகத்தில் கூடுகிறது .
பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகச் சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
புதிய பொலிஸ் மாஅதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.