கடந்த இரண்டு மாதங்களில் 3,642 விபத்துக்கள்!
இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், 3,600 க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 3,642 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 422 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,730 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தவிர 641 விபத்துக்களில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
