36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

 

36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்.உடுவில் பகுதியில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த நபர் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், குறித்த விடயம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்