
3,500 ரூபா கடனுக்காக நண்பனின் உயிரை எடுத்த சக நண்பன்
சபுகஸ்கந்த பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கடன் விவகாரம் தொடர்பில் சக நண்பனை ஒருவர் கொலை செய்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரொஷான் சமிந்த (வயது – 41) என்ற வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பிரதேசத்தில் தனது நண்பனுக்கு 3500 ரூபாய் கடனாக கொடுத்ததையடுத்து அதை திருப்பி பெற்றுகொள்ளும் போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் தனது நண்பனை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்டவர் காயமடைந்த நிலையில் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
