35 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 6 மாதகால விசா

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் வகையில் 35 நாடுகளுக்கு 6 மாதங்கள் தங்கியிருக்கும் 5 வருட பல நுழைவு சுற்றுலா விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒருவருடத்தில் பலதடவைகள் வந்து செல்லக் கூடிய விசாக்களுடன் , கூடுதலாக 6 மாதங்கள் தங்கும் கால அவகாசத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.