சுவிட்சர்லாந்தில் 1700 கஞ்சா செடிகளுடன் 33 வயது இளைஞன் கைது

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 1700 கஞ்சா செடிகளுடன் ஒருவரை மாநில பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

சூரிச் மாநிலம் நுரேஸ்டோர்ப்(Nürensdorf) பகுதியில் உள்ள நிலத்தடி அறையில் இச்செடிகள் வளரக் கூடிய புதிய தொழில் நுட்ப வசதிகளை கொண்டாதாக குறித்த அறை பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒருகிலோகிராம் கஞ்சா விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்ட பொலிசார், இச்சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய சுவிஸ் நாட்டு இளைஞனை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் க்ளோட்டன் பொலிஸ் நிலையில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், வின்டர்த்தூர் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு குறித்த இளைஞன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்