33 வருடங்களின் பின்னர் ஆலயத்தை பார்வையிட அனுமதி!
-யாழ் நிருபர்-
கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் (33 வருடங்கள்) ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாவை இராணுவத்தினரின் அனுமதியுடன்உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்