33 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது
மாத்தறை, திக்வெல்ல – ஊறுகமுவ பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 33 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 66 கோடி ரூபாய் பெறுமதியானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
