32 ஆயிரம் ஏக்கருக்கு நீர் திறப்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -மாவிலாறு ஆற்றிலிருந்து பெரும்போகச் செய்கைக்காக நீரை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாவிலாற்றில் இடம்பெற்றது.

இதன்போது சமய அனுஷ்டானங்களுடன் நீர் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நீரானது மாவிலாற்றை நம்பி வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளும்  32 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.யு.எம்.இஜாஸின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை நீர்ப்பாசன பணிப்பாளர் கே.சுப்பிரமணியம் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் வதிவிட திட்ட முகாமையாளர், பொறியியலாளர் உதவியாளர்கள், அலுவலக ஊழியர்கள், பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.