300,000 ரூபா இலஞ்சம் வாங்கிய விவசாய திணைக்கள அதிகாரிகள் இருவர் கைது!
கந்தானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட, ஆண்டியம்பலம விவசாய சேவைகள் மற்றும் ஆராய்ச்சி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உற்பத்தி அதிகாரி ஆகிய இருவர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா-எலவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், 300 000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், கடந்த 15 ஆம் திகதி விவசாய சேவைகள் திணைக்கள அலுவலகத்தில், இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாடளித்தவருக்கு சொந்தமான ஒரு வயல் நிலத்தை, வயல் அல்லாத நிலமாகப் பெயரிடவும், அது தொடர்பில் உறுதிப்படுத்தும் கடிதத்தை வழங்கவும், சந்தேக நபர்கள் 300 000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக தெரிய வருகின்றது.
மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர்கள் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.