300 கிலோ போதைப்பொருளுடன் அறுவர் கைது
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தென் மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 300 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
