3 வயது சிறுமியின் கையில் சூடு : இராணுவ சிப்பாய் கைது

பொலன்னறுவை பகுதியில் மூன்று வயது சிறுமியின் கையில் சூடுவைத்த குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் சிறுமியின் தந்தையின் இளைய சகோதரர் என தெரியவருகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி செய்த தவறொன்றிற்காக கையில் சூடு வைப்பது போது சிறுமியை அச்சுறுத்த முயற்பட்ட போது சிறுமியின் கை தீ பட்டதில் சிறுமி காயமடைந்துள்ளதாக விசாரணையில் இவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.