பட்டத்தின் வாலை பிடித்த 3 வயது சிறுமி: வானில் பறந்த வீடியோ வைரல்

தைவான் நாட்டில் பட்டம் விடும் திருவிழாவின்போது, ராட்சச பட்டம் ஒன்றை பறக்க வைத்த நிலையில் அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார்.

பின்னர், காற்றின் வேகம் சீரான நிலையில் அந்த சிறுமி மீண்டும் கீழே வந்ததையடுத்து, அந்த சிறுமியை, அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள் பட்டம் விடும் திருவிழாவை உடனடியாக நிறுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் 3 வருடங்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்