
3 வயது சகோதரனால் துப்பாக்கி சூடு: 1 வயது குழந்தை உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஃபோல்புரூக் நகரில் தமது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மூலம் 3 வயது சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
