3 வயது குழந்தையை தரையில் அடித்து கொலை முயற்சி: தந்தை கைது

அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால், உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை தல்துவ தோட்டத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குழந்தையைத் தரையில் அடித்துவிட்டு, தனது மனைவிக்கு முன்னால் சென்று விஷம் அருந்தியுள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர் அடிப்படை சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிசாவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்