3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலையினால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை வரை அமுலில் இருக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.