3 பேருந்துகள் மோதி விபத்து: 29 பேர் படுகாயம்

காலி, இமதுவ – அங்குலுகஹா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று பேருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தும் காலை 8.30 மணியளவில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 23 பேரும் இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்