3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.