3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பு பிரதேசத்தில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்களாவர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தளை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 3 கிலோ 336 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.