
3 இலட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது 8 இலட்சம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அத்தியாவசிய பொருட்களைப் போன்றே புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
3 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதாரண ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை முன்னணி கார்களின் விலையும் 60 முதல் 90 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
