3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் மீட்கப்பட்ட தங்க முட்டை

அலெஸ்கா விரிகுடா கடல்பகுதியில் 3 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் மர்மப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தங்க நிறத்தில் காணப்படும் குறித்த மர்மபொருள் தங்க முட்டையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் கடலின் ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இதுவரை இதுபோன்றதொரு பொருள் கண்டறியப்படவில்லை எனவும்  இதனை விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்விற்குட்படுத்தி வருகின்றனர்.

குறித்த பொருளானது தங்க முட்டையாக உறுதிப்படுத்தப்பட்டால் அது இதுவரை கடலின் ஆழத்தில் உயிர்வாழ்கின்ற கண்டறியப்படாத உயிரினம் ஒன்றின் முட்டையாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது 10 சென்றிமீற்றர் அகலம் கொண்ட அசைவற்ற சடப்பொருளாக காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

முட்டை வடிவில் காணப்படுகின்ற குறித்த மர்மப்பொருளானது உயிரினம் ஒன்றிலிருந்து வெடித்து சிதறியிருக்கலாம் என்பதோடு, அதிலிருந்து சில உயிரினங்கள் வெளிவந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.