3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு

அர்ஜெண்டினாவில் பிரபல பாடகர் லியாம் பெய்ன், விடுதி ஒன்றின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

முன்னதாக அதீத போதை பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம் பெய்ன் இந்த பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் மூன்றாவது மாடியிலிருந்து அவர் விழுந்து இறந்த சம்பவம் எதிர்பாராத விபத்தா அல்லது தற்கொலை முடிவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

உலக அளவில் பிரபலமாக உள்ள ஆங்கில இசைக்குழுக்களில் ஒன்றாக இருந்தது One Direction. இந்த குழுவில் பாப் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். பின்னர் குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஒன் டைரக்‌ஷன் குழு பிரிந்த நிலையில் லியாம் பெய்ன் அதிலிருந்து விலகினார்.