-மூதூர் நிருபர்-
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்தி திருகோணமலைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்தே இவ் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 9 பேர் மூதூர் தள வைத்தியசாலையிலும், 3 பேர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





