மழை காரணமாக கந்தளாய் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று இரவிலிருந்து பெய்து வருகின்ற மழை காரணமாக, பேராறு இரண்டாம் கொலனி மூன்றாம் கொலனி மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு,வடிகாண்களிலும் நீர் நிரம்பி வழிகின்றன

இதனால் ஒரு சில பகுதிகளில் வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

கந்தளாய் பிரதேசத்தில் திட்டமிடல் இல்லாத வீதி அமைப்பினால் ஏற்பட்ட வடிகான்களால் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுகிக்னறனர்.

oplus_2
oplus_2
oplus_2
oplus_2