ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

குறித்த திரைப்படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது.

இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தநிலையில், விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அப்பேட் கொடுத்துள்ளது.

அந்த அப்டேட் , இன்று வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

.