-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில், மோட்டார் சைக்கிள்-முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவத்தின் பின்னர், முச்சக்கர வண்டிச் சாரதி தப்பித்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



